ஓடிடியில் நயன்தாராவின் நெற்றிக்கண்

6

நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ளது நெற்றிக்கண் என்ற திரைப்படம் இப்படம் ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இதில் பார்வையற்றவராக நயன் தாரா நடித்துள்ளார்.  இந்த திரைப்படத்தை மிலிந்த் ராவ் என்பவர் இயக்கியுள்ளார்.

இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் போன்றோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் முழுவதும் தயாராகி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும் என்று இப்படம் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணத்தால் திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தை வெளியிடுவதில் இழுபறி நிலை நீடித்தது.

இந்நிலையில் இந்த படத்தை ஓடிடி மூலமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதன்படி விரைவில் நெற்றிக்கண் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

பாருங்க:  கொரோனா பாதித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு - திருச்சியில் பரபரப்பு
Previous articleசார்பட்டா பரம்பரை படத்தின் விமர்சனம்
Next articleசர்ச்சை கிளப்பிய சுற்றறிக்கை – மாநகராட்சி துணை ஆணையர் விடுவிப்பு