Published
2 years agoon
சூர்யா நடித்து சமீபத்தில் வந்த படம் சூரரை போற்று. இந்த படம் கடந்த நவம்பர் 10ம் தேதி தீபாவளிக்கு சில நாட்கள் முன் வெளியானது. ஏழைகளும் ப்ளைட்டில் ஏறி பயணிக்கலாம் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட படம்.
சூர்யா கதாநாயகனாகவும் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். சுதா கொங்கரா இப்படத்தை இயக்கி இருந்தார்.
இப்படத்தை ஆஸ்காருக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த நடிகை என மூன்று பிரிவுகளில் இப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.