Latest News
ஆண்மை ரீதியான பிரச்சினைகளை நீக்கும் ஓரிதழ் தாமரை
சிலருக்கு தாம்பத்ய ரீதியிலான பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். இதற்காக சில தவறான மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவார்கள் .இல்லையேல் இதற்கு வழி ஏதும் இல்லையா என கவலை கொள்வார்கள்.
ஓரிதழ் தாமரை அதுபோல ஆண்மை ரீதியான எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது.
இது நாட்டுமருந்து கடைகளில் பவுடராகவும், லேகியமாகவும், டேப்ளெட் வடிவிலும் கிடைக்கும் இதை சாப்பிட்டு வந்தால் ஆண்மை ரீதியான அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி உடலுக்கு பலம் தருகிறது.
இலை, தண்டு, வேர், பூ, காய் என ஓரிதழ் தாமரையின் முழு சமூலத்தை நிழலில் உலர்த்திப் பொடி செய்து இரவு தூங்கச்செல்வதற்குமுன் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இதைத் தொடர்ந்து ஒரு மண்டலம் செய்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.
இதே சமூலத்தை (வேர் முதல் பூ வரை) அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை ஒழுக்கு, அடி வயிறு வலி போன்றவை சரியாகும்.
சமூலத்தை 21 நாட்கள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு 50 மில்லி ஆட்டுப்பால் குடித்து வருவதன்மூலம் இழந்தை ஆண்மை சக்தி திரும்பக் கிடைக்கும்.
இப்படியாக ஓரிதழ் தாமரை ஆண்மை ரீதியான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகிறது.