சுவையான ஓரியோ  மில்க் ஷேக் செய்வது எப்படி

சுவையான ஓரியோ மில்க் ஷேக் செய்வது எப்படி

வெயில் மண்டையை பிளந்து அடித்துக்கொண்டிருக்கிறது வெளியில் சென்றாலே தாகம் தொண்டையை பிடித்து இழுக்கிறது. இந்த வெயிலிற்கு குளு குளு என மில்க் ஷேக் செய்து சாப்பிடும் முறை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

1 லிட்டர் பால்

2 கப் சர்க்கரை

3 பாக்கெட் ஓரியோ பிஸ்கெட்

4  ஒருகப் ஐஸ் க்யூப்

5 சாக்லெட் ஐஸ்க்ரீம் அரைகிலோ

6. கொஞ்சம் காபி தூள்

7. சிறிதளவு வெண்ணிலா ஐஸ்க்ரீம்

மிக்ஸியில் ஐஸ் க்ரீம் பாதிக்கும் மேல் சேர்த்துக்கொள்ளுங்கள், கொஞ்சம் சிறிதளவு காபி தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். காய்ச்சி ஆற வைத்த பாலை அதில் ஊற்றிக்கொள்ளுங்கள்.

ஓரியோ பிஸ்கெட்டை உடைத்து மிக்ஸியில் போடுங்கள். ஏற்கனவே சேர்த்த எல்லாவற்றையும் போட்டு  நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். இப்போது ஒரு கண்ணாடி டம்ளரில் அதை ஊற்றி மேலே கொஞ்சம் வெண்ணிலா ஐஸ்க்ரீம் போட்டு குடிக்கலாம் நன்றாக இருக்கும்.