அதிமுக விழாவில் பாஷா வசனத்தை பேசிய ஓபிஎஸ்…

253

அதிமுகவின் இப்தார் நோன்பு விழாவில் நடிகர் ரஜினி பேசிய வசனத்தை துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதிமுக சார்பாக ஒவ்வொரு வருடமும் இப்தார் நோன்பு திறக்கும் விழா நடைபெற்றுவது வழக்கம். இந்த முறை சென்னை நந்தம்பாக்கத்தில் அந்த விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஒபிஎஸ் தலைமையேற்று நடத்தினார்.

அப்போது பேசிய ஓபிஎஸ் ‘ அதிமுக நடத்தும் இப்தார் விருந்து சம்பிரதாய நிகழ்ச்சி அல்ல. இது ஒரு சரித்திர நிகழ்ச்சி. ஜெயலலிதா காட்டிய வழியில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்’ என்றெல்லாம் பேசிய அவர் இறுதியில் ‘ ஆண்டன் நல்லவங்களை சோதிப்பான். ஆனால் கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான். ஆனால் கை விட்டு விடுவான்’ என பாட்ஷா படத்தில் ரஜினி பேசிய வசனத்தை பேசி முடித்தார்.

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக பல இடங்களில் சந்தித்த தோல்வி பற்றி அவர் இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  லாஸ்லியா கதறி அழ பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கவின்- இதோ வீடியோ