Tamil Flash News
அதிமுக சந்தித்த தோல்வி – முதல்வர் பதவியை குறிவைக்கும் ஓ.பி.எஸ்
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வியை வைத்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் மீண்டும் முதல்வர் பதவியில் அமர காய் நகர்த்தி வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.
தமிழகத்தில் 22 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் 38 தொகுதிகளில் மக்களவை தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இதில், 37 மக்களவை தொகுதி மற்றும் 13 சட்டமன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், ஒரே ஒரு மக்களவை தொகுதியிலும், 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
9 எம்.எல்.ஏக்கள் கிடைத்ததால் அதிமுக தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டாலும், திமுக பெற்ற வெற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அசைத்துப்பார்த்துள்ளது. அதுவும் முதல்வரின் சொந்த ஊரான சேலம் தொகுதியிலேயே திமுக வெற்றி பெற்றுள்ளது அதிமுகவின் சரிவையே உணர்த்தியுள்ளது.
தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாமல் போனது பாஜக தலைமைக்கு பழனிச்சாமி மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையே காரணம் காட்டி மீண்டும் முதல்வர் பதவியில் அமர ஓ.பி.எஸ் திட்டம் தீட்டி வருவதாக அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அல்லது பொதுச்செயலாளராக தன்னை நியமிக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கவும் ஓ.பி.எஸ் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.