Tamil Flash News
இந்த புலியை கூண்டில் அடைத்தால் இதே பாசம் காட்டுமா? – கருணாஸை கலாய்த்த ஓபிஎஸ்!
சட்டசபை விவாதத்தில் கருணாஸ் எம்.எல்.ஏ-வை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிண்டலடித்ததால் சிரிப்பலை எழுந்தது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. அதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்று பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ “நான் பாசப்புலி, முக்குலத்தோர் புலி. இந்த முக்குலத்தோர் புலிகள் பாசப்புலிகள். ஐந்தாண்டுகள் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. எங்கள் ஆதரவு எப்போதும் அதிமுகவிற்கே” எனப்பேசினார். அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ் “இந்த புலியை கூண்டில் அடைத்தாலும் இதே பாசம் காட்டுமா?” எனக் கூறினார். இதனால் சட்டசபையில் சிரிப்பொலி எழுந்தது.
கடந்த ஆண்டு முதல்வர் பழனிச்சாமி மற்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை கடுமையாக விமர்சித்த வழக்கில் கருணாஸ் சிறைக்கு சென்று ஜாமீன் பெற்று வந்துள்ளார். அதை நினைவூட்டும் வகையில் ஓ.பி.எஸ் அவரை கிண்டலடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.