Published
1 month agoon
சமூக வலைதளங்கள் பலவற்றில் நாம் இருக்கும்போது நம்மை தூண்டிவிடக்கூடிய விசயம் ஒரு விளம்பரம் வரும் அது என்னவென்று பார்த்தால் அது ஆன்லைன் ரம்மியாகத்தான் இருக்கும்.
அதை பார்த்த நமக்கு அதை விளையாட வேண்டும் என்ற எண்ணம் வரும். ஒரு காலத்தில் நமக்கு சீட்டுக்கட்டை பார்த்தாலே ஆனந்தம் வரும் உடனே விளையாட மனம் ஏங்கும் அப்படி சீட்டுக்கட்டின் நவீன வடிவம்தான் ஆன்லைன் ரம்மி.
ஆன்லைன் ரம்மியால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதை சில காலம் தடை செய்து வைத்திருந்தார்கள். பின்பு உள்ளே மீண்டும் வந்து விட்டது. இதில் சேர்ந்து விளையாடி பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கின்றனர்.
இதில் பெரும் கொடுமை என்னவென்றால், ஆன்லைன் ரம்மி விளையாட்டை சில முக்கிய நடிகர்கள், இயக்குனர்களே ஊக்கப்படுத்துவதுதான்.
இந்நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள டிஜிபி சைலேந்திரபாபு, சினிமா நடிகர்கள் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் தோன்றுவதால் அதை பார்த்து நீங்களும் விளையாட வேண்டாம். ஆன்லைன் ரம்மி விளையாட்டு அல்ல மோசடி என சைலேந்திரபாபு கூறியுள்ளார்.