ஆன்லைன் ரம்மி என்ற இணையதள விளையாட்டால் பலர் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் இதில் பாதிக்கப்பட்டு உருக்கமாக மனைவி குழந்தைகளுக்கு கடிதம் எழுதி வைத்து சென்றது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.
இந்த நிலையில் ஆந்திர அரசு ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க முயற்சி எடுத்து வருகிறது. இது போல ஒரு சில மாநில அரசுகளும் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க முயற்சி எடுத்து வருகிறது.
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த தமன்னா உள்ளிட்ட திரை நட்சத்திரங்களை கோர்ட் கண்டித்துள்ளது.
இது போல தமிழக அரசும் நடவடிக்கை எடுக்குமா என முதல்வர் எடப்பாடியிடம் நிருபர்கள் இன்று கேட்டனர் அதற்கு பதிலளித்த முதல்வர் தமிழ்நாட்டிலும் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்படும் அது விளையாடினாலே குற்றமாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.