ஆன்லைன் ரம்மிக்கு சினிமாக்காரர்கள் துணைபோக கூடாது- நெல்லை டெபுடி கமிஷனர்

ஆன்லைன் ரம்மிக்கு சினிமாக்காரர்கள் துணைபோக கூடாது- நெல்லை டெபுடி கமிஷனர்

சமீபகாலமாக பலரது பணத்தையும் உயிரையும் பறித்து வரும் ஒரு விஷயமாக ஆன்லைன் ரம்மி பார்க்கப்படுகிறது.ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தான் என்ன செய்கிறோம் என தெரியாமல் வாழ்க்கையை தொலைப்பவர்கள் ஏராளம்.

இதனால் நிறைய பணத்தை இழக்கின்றனர். இழந்த பணத்தை மீட்க முடியாமல் தற்கொலையை நாடுகின்றனர். சமீபத்தில் கூட புதுச்சேரியை சேர்ந்த ஒரு நபர் இது போல தற்கொலை செய்துகொண்டு விட்டு ஆன்லைன் ரம்மியின் தீமைகளை கண்ணீர் மல்க பட்டியலிட்டு தன் மனைவிக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு உயிரிழந்தது ஞாபகமிருக்கலாம்.

இந்த ஆன்லைன் ரம்மியை நெல்லை டவுன் டெபுடி கமிஷனர் அர்ஜூன் சரவணன் கண்டித்துள்ளார். சமூக வலைதளங்களிலும் சமூக சீர்திருத்தங்களிலும் மிக ஆக்டிவாக செயல்படக்கூடியவர் சரவணன்.அவர் கூறியிருப்பதாவது.

விளையாட்டு & சினிமா பிரபலங்கள் எப்படி மது, போதைப்பொருள் விளம்பரங்களை தவிர்க்கின்றனரோ அதைப்போல இதையும் முற்றிலும் தவிர்த்தல் நலம். மக்கள் அளிக்கும் புகழ் மக்களின் துயரத்திற்கு வழிவகுப்பது நகைமுரண் என கூறியுள்ளார்.