Connect with us

ஆன்லைன் ரம்மி முதல்பக்க விளம்பரம்- எடப்பாடி கண்டனம்

Entertainment

ஆன்லைன் ரம்மி முதல்பக்க விளம்பரம்- எடப்பாடி கண்டனம்

இணையத்தில் ஆபத்தை ஏற்படுத்தி வரும் விளையாட்டுக்களில் ஒன்றுதான் ஆன்லைன் ரம்மி விளையாட்டு. இந்த விளையாட்டு மிக ஆபத்தானது பலரும் இந்த விளையாட்டை முதலில் விளையாடி 1000 முதல் 50000 வரை பணம் பெறுகின்றனர்.

ஆஹா 50000 வரை கிடைக்கிறதே பரவாயில்லை என ஆசைக்கோளாறில் ஆர்வக்கோளாறில் மேலும் தங்களிடம் உள்ள பணத்தை ஆன்லைன்ரம்மி விளையாட்டில் விட்டு விடுகின்றனர்.

இந்த விளையாட்டில் பலரும் தங்கள் பணத்தை இழந்து வருவதால் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். எண்ணற்றவர்கள் இந்த ஆன்லைன் விளையாட்டால் உயிரை இழந்துள்ளனர்.

இருப்பினும் இந்த விளையாட்டை அரசு தலையிடவில்லை. நேற்றும் கூட ஒரு பெண் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இறந்த நிலையில் எல்லா நாளிதல்களின் முதல் பக்கத்தில் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு பற்றிய விளம்பரம் பெரிய அளவில் வந்துள்ளது.

இதை முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சிதலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டித்துள்ளார் அவர் கூறி இருப்பதாவது,

சென்னையில் இன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஒரு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையிலும் இன்று முழு முதற்பக்க ஆன்லைன் ரம்மி விளம்பரம் வருகிறது. காவல்துறை டிஜிபி-யே ஆன்லைன் ரம்மி அல்ல அது ஆன்லைன் மோசடி, உங்கள் உயிரைக் கொல்லலாம்

என வெளிப்படையாக எச்சரிக்கும் நிலையிலும் கூட, இந்த உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்? இன்னும் எத்தனை உயிர்களை தெரிந்தே கொல்லப்போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்?

More in Entertainment

To Top