Entertainment
சுவையான வெங்காய பக்கோடா செய்வது எப்படி
பக்கோடா எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு காரம் ஆகும். வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் கலந்து மொறு மொறுன்னு வெங்காய பக்கோடா சாப்பிடுவதே அலாதியானது அப்படியான வெங்காய பக்கோடாவை விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா? வாங்க நாம இன்னிக்கு வெங்காய பக்கோடா எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
இதற்கு தேவையான பொருட்கள் என்ன என்ன என்று பார்க்கலாம்.
பெரிய வெங்காயம் – 1/4 கிலோ
அரிசி மாவு – 50 கிராம்
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – 1 கொத்து
கடலை மாவு – 100 கிராம்
எண்ணெய் – 1/4 லிட்டர்
உப்பு – தேவையான அளவு
முதலில் பெரிய வெங்காயத்தை நீள வாக்காக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு அனைத்தையும் ஒன்றாக சேர்க்கவேண்டும் பிறகு ஒரு மேஜைக் கரண்டி எண்ணெயை சுடவைத்து அதனுடன் சேர்க்கவேண்டும் .
தேவை என்றால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் கலந்துக் கொள்ளுங்கள்.
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள கலவையை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பரவலாக உதிர்க்கவும்
மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுத்து, எண்ணெயை வடியவிட்டு பின் பரிமாறவும்.