திருச்சியில் ஒரு வயதுக் குழந்தைக்கு கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

திருச்சியில் ஒரு வயதுக் குழந்தைக்கு கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தையிடம் இருந்து அவரது குழந்தைக்கு கொரோனா பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிவிட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 1075 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

அதில் திருச்சியில் புதிதாக 5 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் ஒரு வயது குழந்தையும் அடக்கம். ஏற்கனவே கொரோனா தொற்று இருந்த தந்தையின் மூலம் அந்த குழந்தைக்குப் பரவி இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. கைக்குழந்தை என்பதால், அதன் தாயாரும் உடனிருக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.