Entertainment
ஒரு ரூபாய் இட்லி கடை பாட்டிக்கு மஹிந்த்ரா நிறுவனர் கொடுத்த கிப்ட்
ஒரு உயர்தர சைவ ஹோட்டலில் போய் இட்லி என சாப்பிட்டால் ஒரு இட்லி 30 ரூபாய் அளவில் கொடுப்பார்கள் நாலு இட்லி சாப்பிட்டால்தான் பசி அடங்கும் நாலு இட்லிக்கு 120 ரூபாய் ஆகி விடும்.
இது போக ப்ளாட்பார கடைகளில் சாப்பிட்டால் விலை மலிவாகத்தான் இருக்கும் இருப்பினும் அவர்களும் ஒரு இட்லி 5 ரூபாய் 6 ரூபாய் என விற்பார்கள்.
கடுமையான விலைவாசியை மக்கள் சந்தித்து வரும் இந்த நிலையிலும் கோவை மாவட்டத்தில் வடிவேலாம்பாளையம் என்ற இடத்தில் கமலாத்தா என்ற பாட்டி வெறும் 1 ரூபாய்க்கு இட்லி விற்றது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த பாட்டியை ஒரு யூ டியூப் சேனல் பேட்டி கண்டு எடுத்தவுடன் ஊர் உலகத்தில் இருந்த சேனல்கள் எல்லாம் அந்த பாட்டியை பேட்டி கண்டன. இதனால் அந்த பாட்டி எளிதில் பிரபலமானார். அந்த பாட்டியை பற்றி தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ராவுக்கு தெரிய வந்தது. அந்த பாட்டிக்கு தனியாக வீடு கட்டி கொடுப்பதாக ஆனந்த் மஹிந்திரா உறுதி அளித்தார்.
அதன்படி அன்னையர் தினமான நேற்று ஆனந்த் மகிந்த்ரா பாட்டிக்காக கட்டிக்கொடுத்த வீட்டின் சாவி ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆனந்த் மகிந்த்ரா வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது,எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர்க்கு, சிறிது சந்தோஷம் கொடுக்கும் முயற்சியை விட வேறு ஒரு பெரிய சந்தோஷம் இல்லை
எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர்க்கு, சிறிது சந்தோஷம் கொடுக்கும் முயற்சியை விட வேறு ஒரு பெரிய சந்தோஷம் இல்லை. pic.twitter.com/KCN7urkSTG
— anand mahindra (@anandmahindra) May 8, 2022
