கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்திய அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா குறித்த தகவல்களை தினம்தோறும் ஊடகங்கள் மூலம் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்து வருகிறார்.
இன்று அவர் அளித்த தகவலில், தமிழகத்தில் மட்டும் 31 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாக உள்ளதாகவும், மொத்தமாக தமிழகத்தில் இன்று 1204 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து இன்று பாதிக்கப்பட்ட 31 பேர்களில் 21 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக மேலும் சில தகவல்களை சுகாதாரத்துறை செயலாளர் பகிர்ந்துள்ளார்.
இதன்படி, திண்டுக்கல் – 9, சென்னை – 5, தஞ்சாவூர் – 4, தென்காசி – 3, மதுரை – 2, ராமநாதபுரம்-2, நாகப்பட்டினம் – 2, கடலூர் – 1, சேலம் – 1, சிவங்கங்கை – 1, கன்னியாகுமரி – 1 ஏனைய மாவட்டங்களை சேர்த்து மொத்தம் 31 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வீட்டு கண்காணிப்பில் 28711 பேரும், அரசு கண்காணிப்பில் 135 பேரும், வீட்டு கண்காணிப்பு முடிந்தவர்கள் சுமார் 68519 பேர்கள் என்றும் காதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.