சீனாவில் ஆரம்பித்த கொரொனா வைரஸ் தற்போது உலகமெங்கும் பரவி கட்டுக்கடங்காத காற்றைப் போல பரவி வருகிறது. இந்நிலையில் இந்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை வரும் மே 3ஆம் தேதி வரை அமல்படுத்திள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் எல்லைகளும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், காய்கறி கடைகள் முதல் மருந்தகங்கள் வரை தமிழக அரசின் வழிமுறைப்படி செயல்பட்டு வருகிறது. இதன்படி, காய்கறிகள் பழங்கள் முதலிய அத்தியவாசிய பொட்ருகள் அனைத்தும் வீட்டிற்கே வந்து வழங்கும் சேவையை ஏற்கனவே தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, பொதுமக்களுக்கு தேவையான மருந்துகளை வழங்க புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்பில், லாக்டவுன் நீட்டிக்கப்பட்டதன் காரணமாக, தமிழ்நாடு ஹெல்த் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளை வீட்டு வாசல்களில் வழங்குவதற்கு வசதி செய்துள்ளதாகவும், மருத்துவர் அளித்த மருந்துச்சீட்டு வைத்திருந்தால் போதும், TNCDA ஆல் ஆதரிக்கப்படுகிறது, மாண்புமிகு முதல்வர் இயக்கியபடி 14.04.20 முதல். மாநிலம் முழுவதும் இச்சேவைகளைப் பெற கட்டணமில்லா 18001212172 ஐ அழைத்து ஆர்டர் செய்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.