Latest News
ஓமிக்ரான் – விமான நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
சர்வதேச விமான பயணிகளுக்கு இந்தியாவில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது 12 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பல நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ பதிவு கட்டாயம்.
கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளாக இரண்டு ஊசி போட்ட சான்றிதழ் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களில் இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.