தேவையான பொருட்கள்
1 கப் கடலை மாவு
4 டேபிள் ஸ்பூன் பச்சரிசி மாவு
1 டேபிள் ஸ்பூன் மிளகாய் பவுடர்
அரை டேபிள் ஸ்பூன் பட்டர்
கொஞ்சம் உப்பு
இப்போது கொஞ்சம் கிளறி விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு இடியாப்ப மாவு பிசையும் பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்
இப்போது அடுப்பில் எண்ணெய் ஊற்றி மீடியம் ப்ளேமில் தீயை வைத்துக்கொள்ள வேண்டும்.
எண்ணெய் அதிக சூடாக இருக்க கூடாது குறைவான சூட்டிலும் மிதமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது இடியாப்ப உரலை எடுத்துக்கொண்டு முறுக்கு பதத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.
நல்ல மஞ்சள் நிறத்தில் வெந்த உடன் அதை எடுத்து விடலாம் அத்துடன் கருவேப்பிலை வறுத்து கொஞ்சம் மிக்ஸ் செய்து கொள்ளுங்கள் அந்த முறுக்கை உடைத்து பாட்டிலில் அடைத்து மிக்சர் போல சாப்பிடலாம்.