16 வயது சிறுமிக்கு 23 வயது வாலிபருடன் திருமணம் – தடுத்து நிறுத்திய போலீஸ்

219
16 வயது சிறுமிக்கு 23 வயது வாலிபருடன் திருமணம்

சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அருகேயுள்ள குருவராஜ பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அதே பகுதியையை சேர்ந்த வாலிபருக்கும் இன்று திருமணம்  நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இதில், பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணம் பற்றி வேலூர் சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. எனவே, வேலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், தாசில்தார் மற்றும் போலீசார் நேற்று இரவு திருமணம் நடக்கவிருந்த திருமண மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு திருமணம் நடக்கவிருந்தது அவர்களுக்கு தெரியவந்தது. எனவே, இந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மீறி நடத்தினால் கடுமையான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்து சென்றனர்.

பாருங்க:  திமுக பக்கம் சாயும் அமமுக - சசிகலாவுக்கு தூதுவிட்ட எடப்பாடி பழனிச்சாமி