Latest News
ஒடிசா ஊரடங்கு- நாய்கள் மற்றும் மாடுகளுக்கு உணவளிக்க நிதி
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது இதனால் பல மாநிலங்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றன. பல மாநிலங்களிலும் லாக் டவுன் செயல்முறை கடுமையாக பின்பற்றப்படுகிறது.
ஒடிசாவிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான லாக் டவுன் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் லாக் டவுனால் தெருவில் திரியும் மாடு , நாய்கள் போன்ற விலங்கினங்கள் செத்து மடியும் நிலை உள்ளது.
இவைகளுக்கு உணவளிக்க ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இது 5 மாநகராட்சிகளுக்கும் 40க்கும் மேற்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டு அவர்கள் மூலம் தெருவோர கால்நடைகளுக்கு உணவளிக்கப்பட இருக்கிறது.
ஒடிசாவில் ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் நாய், மாடுகளுக்கு உணவளிக்க ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு..! #Odisha | #CoronaVirus | #Covid19 | #CoronaFund | #Cow | #Dog pic.twitter.com/044njJaciE
— Polimer News (@polimernews) May 11, 2021