அக்டோபர் 15 முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுமா

113

சாப்பாடு இல்லாமல் இருந்து விடுவார்கள் தமிழ் ரசிகர்கள் அவர்களால் திரைப்படம் இல்லாமல் இருக்க முடியாது. அந்த மனநிலைக்கு பலர் வந்து விட்டார்கள். குறிப்பாக இளம் வயது ரசிகர்களான அஜீத், விஜய்யின் ரசிகர்கள் தங்கள் தலைவர்களின் படங்களை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

குறிப்பாக விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக பெட்டிக்குள்ளேயே உறங்கி கொண்டிருக்கிறது. திரையரங்கில்தான் திரையிடவேண்டும் என்று அவர்கள் உறுதியாய் உள்ளார்கள்.

இந்நிலையில் திரையரங்கை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வரும் அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறந்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்து அதற்கான கட்டுப்பாடுகளையும் இன்று வெளியிட்டுள்ளது அரசு.

தியேட்டர் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும், சமூக இடைவெளி, மற்றும் சானிடைசர் மூலம் கை கழுவி கொண்டு செல்லுதல் போன்ற வழக்கமான விதிமுறைகள்தான் அவை.

இருப்பினும் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படுமா என்பது தெரியவில்லை. பல சினிமா பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் அரசுக்கு தொடர் கோரிக்கை விடுப்பதால் மத்திய அரசு அனுமதித்துள்ள விதிமுறைகளை அமல்படுத்தி தியேட்டர்கள் தமிழ்நாட்டிலும் 15 முதல் திறக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவே தெரிகிறது.

பாருங்க:  தமிழகத்திலிருந்து வாரணாசி சுற்றுலா சென்றவர்களுக்கு கொரொனா பரிசோதனை!!
Previous articleநான் பாஜகவில் இணைவேன் என்பது பொய்- குஷ்பு திட்டவட்டம்
Next articleலாக் டவுனை மையமாக வைத்து அமேசான் தயாரித்துள்ள புத்தம் புதுக்காலை படம்