கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி முதல் 21 நாள் லாக் டவுன் செய்யப்பட்டது. லாக் டவுனில் அதிக மக்கள் தவித்தனர் . பால், உணவு, மருந்து உள்ளிட்டவற்றுக்கு மக்கள் தவித்த தவிப்பு சொல்லி மாளாது வெளியே சென்றால் போலீசிடம் அடிவாங்குவது என மக்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் அடிக்கடி ஏதாவது பத்திரிக்கைகள் மீண்டும் ஊரடங்கு வரும் என மக்களை அச்சத்திலேயே வைத்துள்ளனர். சில பத்திரிக்கைகள் ஊரடங்கு மீண்டும் வரும் என செய்தியாக வெளியிட்டு இருந்தது.
இது போல தகவல்களை மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் புரேயு மறுத்துள்ளது. அப்படி ஒரு எண்ணமே மத்திய அரசுக்கு இல்லை இது போல தகவல்கள் தவறானது என மறுத்துள்ளது.