கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருந்ததையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக தொடங்கின. பல இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது.
பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தடுப்பூசிபோடும் பணிகளை புதிதாக வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் முடுக்கி விட்டார். இப்போது பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர். இவர்கள் பொது இடங்களில் நடமாட தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்தியுள்ளார் மதுரை மாவட்ட ஆட்சியர் . தியேட்டர், ரேஷன் கடை, வங்கிகள் உள்ளிட்ட 18 இடங்களுக்கு தடுப்பூசி போடாதவர்கள் செல்லக்கூடாது என மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.