Published
1 year agoon
இந்தியாவில் கேரளாவில்தான் எந்த ஒரு வைரஸ் என்றாலும் முதலில் பரவி வருகிறது. இதனால் கேரளாவை வறுத்தெடுக்காத நெட்டிசன்களே இல்லை எனலாம். கொரோனா வைரஸ் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பின்பும் கேரளாவில் மட்டும் கட்டுப்படவில்லை தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கேரளாவில் கொரோனா குறைந்து வருகிறது.
இந்த நிலையில் நோரோ வைரஸ் என்ற வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் 13 பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வைரஸால் தீராத வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும் என தெரிய வந்துள்ளது. இதனால் கவனமுடன் இருக்கும்படி கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.