Connect with us

சீனாவில் இருந்து யாரும் வடகொரியாவுக்கு கொரோனாவோடு வந்தால் சுட்டு விடுங்கள்- கிம் ஜாங் உன்-

Corona (Covid-19)

சீனாவில் இருந்து யாரும் வடகொரியாவுக்கு கொரோனாவோடு வந்தால் சுட்டு விடுங்கள்- கிம் ஜாங் உன்-

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடிக்கு பெயர் போனவர். எதையும் அதிரடியாக செய்து வருபவர். வட கொரிய மக்கள் பல வருடங்களாகவே கிம் ஜாங் உன்னின் குடும்பத்து சர்வாதிகார ஆட்சியிலே வாழ்ந்து வருகின்றனர்.

 

தன் தந்தையின் மறைவுக்கு பிறகு 27 வயதில் அரியணை ஏறிய கிம் ஜாங் உன்னின் அட்டகாசங்கள் சொல்லி மாளாது.

கடுமையான கொடுமையான சர்வாதிகாரி என்றால் இவருக்கு நிகர் எவரும் இல்லை என கூறலாம். சமீபத்தில் கூட இறைச்சி தட்டுப்பாடு உள்ளது என அனைவரும் வீட்டில் வளர்க்கும் செல்ல நாயை ஒப்படைக்க வேண்டும் என கடும் உத்தரவு போட்டதாக கூறப்படுகிறது.

வடகொரியாவில் கிம் ஜாங் உன் என்ன செய்கிறார் என அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியிடப்படுமே தவிர வேறு எந்த தகவலும் அவரை பற்றி வெளியிடப்படாது.

வடகொரியாவில் சமீபத்தில் கொரோனா வைரஸ் பரப்பியதாக ஒருவரை பிடித்தனர் அவர் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லையாம். இதனால் தான் வசித்து வந்த கேசாங் நகரம் முழுவதையும் மூடி சீல் வைத்துவிட்டாராம் கிம் ஜாங் உன். கிம் ஜாங்கின் ராஜாங்கத்தில் அனைவருக்குமே கொடூர தண்டனை மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது.

சில வருடங்கள் முன் தவறு செய்த இராணுவத்தளபதி ஒருவரை வெட்டி அவரது நாய்க்கு உணவாக போட்டார் என்றும் தகவல்கள் உள்ளது. இதெல்லாம் உண்மையா பொய்யா என தெரியவில்லை.

இந்த நிலையில் சீனாவில் இருந்து யாராவது ஊடுருவி வந்தால் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கிற காரணத்தால் அவரை சுட்டு விடுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவு இட்டிருக்கிறாராம் இவர்.

பாருங்க:  ஏப்ரல் 08 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

More in Corona (Covid-19)

To Top