அரை நிர்வாண கோலத்தில் வடநாட்டு கொள்ளையர்கள் – பீதியில் பொதுமக்கள்

0
27
robbers

நள்ளிரவில் கொள்ளையடிக்க வரும் வடநாட்டு கொள்ளையர்கள் புகைப்படம் வெளியாகியுள்ளதால் தேனி மாவட்ட மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

வடமாநிலத்திலிருந்து தமிழகத்தை குறிவைத்து ஏராளமான கொள்ளையர்கள் கொள்ளையடிக்க வருகின்றனர். அவர்கள் பல்வேறு வேடத்தில் தமிழகத்தில் சுற்றி வருகின்றனர்.

சமீபத்தில் தேனி மாவட்டம் அம்மாபட்டி பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு சில வடமாநில கொள்ளையர்கள் வந்துள்ளனர். அவர்கள் சட்டை ஏதும் அணியாமல், அரைக்கால் டவுசர் மட்டும் அணிந்திருந்தனர். அவர்களை கண்டு நாய்கள் குறைத்ததால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அவர்களின் உருவம் நன்றாக பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து உத்தமபாளையம் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.