கொரோனா ஊரடங்காலும் கொடிய கொரோனா நோய்த்தொற்றான டெல்டா வைரஸாலும் பலர் கடந்த இரண்டு மாதமாக பாதிக்கப்பட்டனர். கொரோனா நோய்த்தொற்றால் இயல்பு வாழ்க்கை முடங்கியது பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவில்கள், தேவாலயங்கள், சர்ச்சுகள், தியேட்டர்கள், மால்கள் அடைக்கப்பட்டன.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு தளர்வாக வாரா வாரம் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த வாரம் அண்டை மாவட்டத்துக்கு பஸ் போக்குவரத்து , கோவில்கள் திறப்பு, டீக்கடை, ஹோட்டல்கள் திறப்பு என தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

