நாளை வேட்புமனுத்தாக்கல் அதிகம் இருக்கும்

30

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ல் நடக்க இருக்கிறது இதை ஒட்டி தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் வேட்புமனுத்தாக்கல் செய்ய நாட்கள் நெருங்கி கொண்டிருப்பதாலும் நாளை மாசி மாத நிறைந்த அமாவாசை என்பதால் நாளை நிறைய வேட்பாளர்கள் போட்டி போட்டு மனுத்தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக  திராவிட இயக்கத்தில் வந்த கட்சிகள் எல்லாம் அமாவாசையை எல்லாம் நம்ப மாட்டோம் என ஒப்புக்காக சொல்வார்கள் ஆனால் அமாவாசை வந்து விட்டால் முதல் ஆளாக சென்று மனு அளிக்கும் காட்சிகளை நாளை பார்க்கலாம்.

இந்நிலையில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் முன்பே பாஜகவின் நயினார் நாகேந்திரன் நெல்லையில் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.

பாருங்க:  சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்
Previous articleகமல் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு
Next articleதமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்