இந்த வருடம் காலாண்டு விடுமுறை கிடையாது என வெளியான செய்தி வதந்தி என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. எனவே, வரும் 23ம் தேதி முதல் விடுமுறை துவங்கவுள்ளது.
ஆனால், அக்டோபர் 2ம் தேதி வரை மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் எடுக்கவேண்டும். அது தொடர்பான வீடியோக்களை எடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதாகவும், எனவே, காலாண்டு விடுமுறையிலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.இதனால் உறவினர்கள் வீடு, சுற்றுலா என திட்டமிட்டிருந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை ‘இது முற்றிலும் வதந்தியே. காலாண்டு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. காந்திய சிந்தனை தொடர்பாக விருப்பமுள்ள பள்ளிகள் வகுப்பு எடுக்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள் அதில் கலந்து கொள்ளலாம்’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.