ஆந்திராவில் இருந்து கப்பல் மூலம் 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி தூத்துக்குடி வந்தடைந்ததால் அனல் மின் நிலையத்தில் எஞ்சிய 3 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன.
இதன் மூலம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக மின்சார உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒன்று, மூன்று மற்றும் ஐந்து ஆகிய யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதனால் தமிழ்நாட்டில் மின் வெட்டு அதிகரிக்கும் என்ற நிலையில், விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தன. அங்கிருந்து அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்துச் செல்லப்பட்டு 5 யூனிட்டுகளிலும் முழுமையாக மின் உற்பத்தி நடைபெற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.