நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ப.சிதம்பரத்திற்கு ஜாமின் மறுக்கப்பட்டதோடு, அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்குமாறு சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
நேற்று காலை முதல் சிதம்பரத்தை தேடிய சிபிஐ அதிகாரிகள நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரின் வீட்டில் வைத்து அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.
ஆனால் நேற்று இரவு மற்றும் இன்று காலை அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் சரியான ஒத்துழைப்பு அழைக்கவில்லை எனவும், அமைதியாகவே இருந்தார் எனவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர் படுத்தினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்குமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிபதி அனுமதி கொடுத்து உத்தரவிட்டார்.
இது சிதம்பரம் தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வருகிற 26ம் தேதி வரை அவர் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.