Latest News
1 கோடி வேண்டாம்- கொரொனாவில் உயிரிழந்த மருத்துவரின் தந்தை உருக்கம்
கொரோனா இரண்டாவது அலையின் வேகத்தால் பொதுமக்கள் மட்டுமின்றி இந்த மோசமான பேரிடர் காலத்தில் முன்களப்பணியாளர்களாக விளங்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோரும் பாதிக்கப்படுகின்றனர்.
சிலர் மரணித்தும் விடுகின்றனர். டெல்லியிலும் கொரோனா தொற்றில் சேவையாற்றிய 26 வயதான டாக்டர் என்பவர் உயிரிழந்தார். இவர்களை போன்ற மருத்துவர்கள் உயிரிழந்தால் 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
அதன்படி அவரது குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்ட நிலையில் இறந்து போன மருத்துவரின் தந்தை முஜாஹித் இஸ்லாம், என் மகன் நாட்டுக்காக சேவையாற்றியுள்ளான் அதனால் இந்த பணம் வேண்டாம் என மறுத்து உள்ளார்.
