Entertainment
நிவின் பாலியின் மேக்கப்மேன் பலி
பிரேமம் , நேரம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நிவின் பாலி. இவரின் ஆஸ்தான மேக்கப் மேன் ஷாபு. 37 வயதான இவர் நிவின் பாலியின் மேக்கப் மேனாக மட்டுமல்லாமல் உதவியாளராகவும் இருந்துள்ளார்.
இவரது வீடு கோழிக்கோடு புல்பள்ளி பகுதியில் உள்ளது.
இந்நிலையில் ஷாபு ,நேற்று இரவு வீட்டின் முன்பு இருந்த மரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்கார விளக்குகளை மாட்டிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஷாபு பரிதாபமாக இறந்தார். ஷாபுவின் மறைவுக்கு நடிகர்கள் துல்கர் சல்மான், அஜூ வர்க்கீஸ் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
