நிவர் புயல் காரணமாக 7 மாவட்ட பேருந்து சேவை நிறுத்தம்

63

சென்னைக்கு வெளியே 700 கிமீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் நிவர் புயல் சென்னையை நெருங்கி வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. நாளை மதியம் அளவில் புயல் கரையை கடக்கும் நேரத்தில் பல மாவட்டங்களில் பலத்த புயல் காற்று வீசக்கூடும் கடும் மழையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் நெருங்கி வரும் இவ்வேளையில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர்,கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி முதல் பேருந்து சேவை நிறுத்தப்படுகிறது.

புயல் கரையை கடக்கும் நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை அனைத்து இடங்களிலும் சிறிது நேரம் மின்சாரம் தடை செய்யப்படும் என மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

பாருங்க:  உங்களுக்கு லவ் பண்ண வேற இடம் கிடைக்கலயா? - வைரல் புகைப்படம்
Previous articleசின்னஞ்சிறு சிறுவனின் செயலை புகழ்ந்த லோகேஷ் கனகராஜ்
Next articleகலங்க வைக்கும் நடிகர் தவசியின் மரணம்