வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்தவர் நடிகர் நிதிஷ் வீரா. இப்படத்தில் மற்ற எல்லாரும் ஜாலியான நண்பர்களாக இருந்தாலும் இவர் மட்டும் கொஞ்சம் முரட்டுத்தனமாக கோபம் கலந்து நடித்திருப்பார் இந்த கதாபாத்திரம் வரவேற்பு பெற்றது.
பின்பு புதுப்பேட்டை படத்தில் மணி என்ற கதாபாத்திரத்திலும், சமீபத்தில் வந்த அசுரன் படத்திலும் நடித்தவர் இவர்.
கொரோனா தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று காலை இவர் உயிரிழந்தார்.

