மீண்டும் ஒரு நிர்பயா – உத்திரப்பிரதேச கோரம் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்

103

கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற மாணவி பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்தியாவையே உலுக்கிய இவ்வழக்கில் கொடூரமான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு கிடைத்தது. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நிர்பயா போலவே உத்திரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண்,  கடந்த 14ம் தேதி தனது தாயுடன் வயலுக்கு சென்றார். பின்னர், திடீரென காணாமல் போனார். பிறகு, உடலில் கடுமையான காயங்களுடன், நாக்கு துண்டிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அப்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கழுத்தை நெரித்தும் கொலை செய்வதற்கு முயன்றுள்ளது. மேலும், பலாத்காரத்தின் போது அப்பெண்ணின் நாக்கையும் அந்த கொடூரன்கள் கடித்து கடுமையாக சேதப்படுத்தி விட்டனர்.

அலிகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணின் உடல்நிலை மிக மோசமடைந்து அந்த பெண் மரணமடைந்து விட்டாள். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது என ஏற்கனவே உ.பி முதல்வர் யோகி அறிவித்துள்ளார்.

டெல்லி மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கிலடப்பட்டதை போல இந்த குற்றவாளிகளும் தூக்கிலடப்பட்டதை போல இந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர்களும் தூக்கிலிடப்பட வேண்டும் என பொதுமக்கள், சமூக வலைதளவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#JusticeForManishaValmiki #hangtherapist #RIPManishaValmiki உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளில் மக்கள் தங்களது ஆதங்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாருங்க:  மே 21 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
Previous articleபாபர் மசூதியை திட்டமிட்டு இடிக்கவில்லை- அனைவரையும் விடுவித்தது நீதிமன்றம்
Next articleரியாவுக்கு எதிரான வலுவான ஆதாரம்