Latest News
முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இருந்து நீக்கம்
கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். இவர் வாணியம்பாடி தொகுதியில் இருந்து கடந்த முறை எம்.எல்.ஏ ஆக இருந்து அமைச்சர் ஆனவர்.
தற்போது இவர் திடீரென நீக்கப்பட்டுள்ளார். கட்சி கொள்கைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் எதிராக இவர் செயல்பட்டுள்ளார் என கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து நிலோபர் கபில் நீக்கம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் மற்ற அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிலோபர் கபிலை நீக்கியுள்ளார்கள்.