Latest News
போதை பொருள் ஆன்லைனில் விற்பனை -நடிகை நிலா கண்டிப்பு
தமிழில் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிலா, இவர் தமிழில் ஜாம்பவான், மருதமலை படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களாக தமிழில் இவர் நடிக்கவில்லை.
இவர் சமீபத்தில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார் அதில் ‘தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்களில் சில ஆன்லைனில் எளிதாக கிடைக்கிறது. குறிப்பாக, கஞ்சா செடியில் இருந்து தயாராகும் ஒருவித எண்ணெய் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், முன்னணி ஆன்லைன் நிறுவனத்தின் மூலம் இதை வாங்கலாம். இதுகுறித்து நன்கு சோதனை செய்து பார்த்த பிறகே வெளியில் சொல்கிறேன். இந்த விற்பனை சட்டவிரோதமாக இருந்தால், இதை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
