Entertainment
நிக்கி கல்ராணியை மணக்கும் ஆதி- இருவருக்கும் நிச்சயதார்த்தம்
தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்த நிக்கி கல்ராணிக்கும், ஆதி பின்னிஷெட்டிக்கும் நேற்று நெருங்கி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்த விழா நடந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நண்பர்களைப் பொறுத்தவரை, தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் மட்டும் இதில் கலந்துக் கொண்டார்களாம்.
யாகவராயினும் நா காக்க மற்றும் மரகத நாணயம் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் ஒன்றாக நடித்த ஆதியும் நிக்கியும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர். ஆனால் ஜூலை 2020-ல் ஆதியின் தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிக்கி கலந்துகொண்டபோது அவர்கள் இருவரும் காதலில் இருப்பதாகக் கூறப்பட்டது. அதிலிருந்து அவர்கள் காதலிப்பதாக செய்திகள் வலம் வரத் தொடங்கின. ஆனால் இதற்கு, ஆதி, நிக்கி கல்ராணி இருவரிடமும் இருந்து மறுப்போ, ஒப்புதலோ வராமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அவர்கள் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
