நைட்டி அணிந்தால் அபராதம்

நைட்டி அணிந்தால் அபராதம்

நைட்டி அணிந்தால் அபராதமா என ஆச்சரியப்படாதீர்கள் . அது இங்கு அல்ல ஆந்திரபிரதேசத்தில். இந்த சட்டத்தை போட்டது அரசு அல்ல. மலைவாழ் இனத்தை சேர்ந்த ஒரு பிரிவினர்.

ஆந்திரமாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தோகலபள்ளி என்ற கிராமத்தில் வட்டி என்கிற இனத்தை சார்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள் இந்த கிராமத்தில் பகலில் நைட்டி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை விதித்திருப்பது அந்த கிராமத்தை சேர்ந்த ஊர்த்தலைவர்கள்தானாம்.

ஊர்த்தலைவர்கள் 9 பேரை கிராமத்து மக்களே தேர்ந்தெடுத்துள்ளனர் அவர்கள்தான் இந்த தடையை விதித்துள்ளனர்.

சில பெண்கள் அரசுக்கு தெரியப்படுத்தியபோதும் அரசு அதிகாரிகள் விசாரிக்க வந்தபோது கிராம மக்கள் தலைவர்களுக்கு எதிராக சாட்சி சொல்லவில்லையாம்.