Connect with us

இரவில் பெண்களுக்கு வேலை இல்லை- உ.பி அரசு

Entertainment

இரவில் பெண்களுக்கு வேலை இல்லை- உ.பி அரசு

உலகில் எங்கெங்கு காணிணும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி விட்டன.குறிப்பாக பெண்கள் மட்டுமின்றி சின்ன குழந்தைகளை கூட சமூக விரோதிகள் விடுவதில்லை அந்த அளவு உலகில் சமூகம் சீர்கெட்டு போய் உள்ளது.

இந்நிலையில் சிறு நகரங்களில்  கூட வேலைக்கு செல்லும் பெண்கள் இரவு 7 மணி சமயத்தில் வீடு திரும்பி விடுகின்றனர். ஆனால் பெரு நகரங்களில் நிலைமை அப்படி இல்லை ஷிப்ட் கணக்கில் பெண்களை வேலைக்கு அமர்த்துகின்றனர்.

சில நிறுவனங்களில் இரவு 7 மணிக்கு மேல் பெண்களுக்கு நைட்ஷிப்ட் கொடுக்கின்றனர்.இதனால் பெண்கள் அளவுக்கதிகமாக துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

இதனால் பெண்களுக்கு ஆதரவாக உ.பி அரசு புதிய உத்தரவை இட்டுள்ளது.அதன்படி எந்த ஒரு பெண்ணும் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை கட்டாயத்தின்பேரில் பணிபுரியக்கூடாது. எந்த ஒரு பெண் தொழிலாளரும் எழுத்துப்பூர்வ சம்மதமின்றி பணிபுரியக்கூடாது என உபி அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் பணிபுரிய அவசியம் இருந்தால் அவர்களுக்கு போதிய கண்காணிப்பு, சரியான கழிப்பறை வசதிகள் இருக்க வேண்டும் என உபி அரசின் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

பாருங்க:  மதுரை - ராமேஸ்வரம் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்
Continue Reading
You may also like...

More in Entertainment

To Top