இரவில் மட்டும் திறக்கும் அதிசய சிவன் கோவில்

16

உலகம் முழுவதும் தொன்மையான ஹிந்து மதத்திற்கும் ஹிந்து பெருங்கோவில்களுக்கும் வித விதமான வரலாறு உண்டு. ஞானிகள், யோகிகள் , சித்தர்கள் என பலரும் ஹிந்து தர்மத்திற்கு பெரும் பங்காற்றி இருக்கின்றனர்.

 

பல கோவில்கள் தோன்றியதற்கு புராணக்கதையின் அடிப்படையில் மிகப்பெரும் வரலாறு இருக்கிறது. அப்படியாக ரிஷிகள் வரலாறு காரணமாக ஏற்பட்ட ஒரு அதிசய கோவில் இந்தியாவில் உள்ளது.

இக்கோவிலின் அதிசயம் என்னவென்றால் இரவு மட்டுமே இக்கோவில் திறந்திருக்கும். அதுவும் வாரத்தின் முதல்நாள் திங்கட்கிழமை இரவு 12(விடிந்தால் செவ்வாய்க்கிழமை)மணிக்கு மட்டுமே இக்கோவில் திறக்கப்படும்.

முன் ஒரு காலத்தில் வான் கோபர், மகா கோபர் என்ற முனிவர்கள்  இடையே  ‘இல்லறம் சிறந்ததா? அல்லது துறவறம் சிறந்ததா?’ என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதற்கு தீர்வு வேண்டி சிதம்பரம் சென்று நடராஜ பெருமானிடம் வேண்டினர். அவரோ, தற்போது பொது ஆவுடையார் ஆலயம் இருக்கும் இடத்தில் காத்திருக்கும் படியும், அங்கு வந்து தீர்ப்பு கூறுவதாகவும் கூறி அனுப்பினார்.

சிவபெருமான், ஒரு கார்த்திகை மாதத்தில் ஒரு திங்கட்கிழமையில், சிதம்பரத்தில் பூஜைகள் முடிந்த பிறகு, இங்கு வந்து ஒரு வெள்ளால மரத்தின் கீழ் நின்று முனிவர்கள் இருவருக்கும் தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பு சொல்வதற்காக சிவபெருமான் வந்ததால்  ‘பொது ஆவுடையார்’ என்றும், ‘மத்தியபுரீஸ்வரர்’ என்றும் பெயர் பெற்றார்.

இங்குள்ள ஆலமரமே சிவலிங்கமாக மூலஸ்தனமாக வழங்கப்படுகிறது

இக்கோவில் திங்கட்கிழமை இரவு மட்டுமே பூஜை நடைபெறும். இக்கோவில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து வேதாரண்யம், நாகப்பட்டினம் செல்லும் வழியில் 5 கிமீல் பரக்கலக்கோட்டையில் அமைந்துள்ளது.

பாருங்க:  தெலுங்கு நடிகை தற்கொலை- தயாரிப்பாளர்கள் கைது

திங்கட்கிழமை இரவு தவிர எக்காரணம் கொண்டும் இக்கோவில் பகல் பொழுதில் திறக்கப்படாது. வருடத்தின் பொங்கலன்று மட்டுமே பகலில் இக்கோவில் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜைகள் முடிந்த உடன் அதிகாலை 3 மணிக்கு கோவில் வாசலிலேயே ஒரு பேருந்து நிற்கும் திங்கட்கிழமை இரவு பூஜைக்கு சுற்றுவட்டார மக்கள் அதிக அளவில் வருவர். 12 மணி பூஜை முடிய 1.30 மணி ஆகிவிடும் முடிந்த உடன் 3மணி அளவில் அங்கிருந்த் பேருந்து புறப்பட்டு பட்டுக்கோட்டை பஸ்ஸ்டாண்ட் வந்தடையலாம். பட்டுக்கோட்டை வந்து தங்கள் ஊர்களுக்கு வெளியூர் பயணிகள் செல்லலாம்.

அனைத்து ஊர்களுக்கும் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதி உண்டு.