Latest News
கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று
கேரளா மாநிலம் கோழிகோட்டில் நிபா வைரஸ் பாதித்து 12 வயது சிறுவன் பலியான நிலையில் மேலும் இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸுக்கு 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிறுவனிடம் தொடர்பில் இருந்த 188 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்ட நிலையில் நெருங்கிய தொடர்பில் இருந்த 20 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும்,
ஒருவர் அரசு மருத்துவமனையிலும் மற்றொருவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவரும் தனி வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்
கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
