Entertainment
உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட செல்லப்பிராணிகள்- மீட்டெடுக்கும் நிக்
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் கடந்த இரு மாதங்களாக கடும் போர் நடந்து வருகிறது. எவ்வளவு சொல்லியும் கேட்காத ரஷ்யா உக்ரைனை அழிக்காமல் விடமாட்டேன் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது.
இதனால் உக்ரைனை விட்டு பலர் அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் பலர் தங்கள் செல்லப்பிராணிகளையும் விட்டு செல்லும் அவலம் அரங்கேறி வருகிறது.
இப்படி விடப்பட்ட செல்லப்பிராணிகளை இங்கிலாந்தை சேர்ந்த நிக் என்பவர் எடுத்து வளர்த்து வருகிறார்.
இங்கிலாந்தை சேர்ந்த புகைப்படகலைஞரான இவர் உக்ரைன் சென்று அங்கு பாதிக்கப்பட்டுள்ள செல்லப்பிராணிகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.
உயிருக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லாத சூழலில் நேரடியாக களத்தில் இறங்கி நூற்றுக்கணக்கான செல்லப்பிராணிகளுக்கு உணவளித்திருக்கிறார் நிக். அத்துடன் அடைக்கலம் வேண்டி தவித்துக்கொண்டிருந்த செல்லப்பிராணிகளை மீட்டிருக்கிறார்.
இதையெல்லாம் குண்டுவெடிப்பின் சத்தத்துக்கு இடையில் செய்திருக்கிறார். அத்துடன், தான் செய்துகொண்டிருப்பதை ஆவணப்படமாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மக்களிடம் நிதி உதவி கேட்டிருக்கிறார்.