Connect with us

52 வயது தாய்க்கு 22 வயது இளைஞருடன் காதல்! நெய்மாரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்!

Latest News

52 வயது தாய்க்கு 22 வயது இளைஞருடன் காதல்! நெய்மாரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்!

தன்னைவிட இளைய ஆண் ஒருவரைத் தனது தாய் காதலிக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் கால்பந்து நட்சத்திரம் நெய்மார்.

உலகின் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர்களின் பட்டியலில் பிரேசிலைச் சேர்ந்த நெய்மார் இடம்பிடித்துள்ளார். 25 வயதாகும் நெய்மார் மிக இளம் வயதிலேயே அதிகமாக சம்பாதிக்கும் வீரராக உருவாகியுள்ளார். இந்நிலையில் அவரின் செயல் ஒன்று இப்போது உலகெங்கும் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்துள்ளது.

நெய்மாரின் தந்தை வாக்னர் ரிபெய்ரே மற்றும் தாயார் தாயார் நடின் கான்கேல்வ்ஸ்.நெய்மாரின் தாய் தந்தை இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துவிட்டனர். இதையடுத்து 52 வயதாகும் நெய்மரின் தாயார் நடினுக்கும் 22 வயதான இளைஞர் டியாகோ ரமோஸ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் தனது காதலனுடன்  இருக்கும் புகைப்படத்தை நடின் சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்த புகைப்படம் வைரல் ஆக, அதில் ’மகிழ்ச்சியாக இருங்கள் அம்மா. நான் உங்களை விரும்புகிறேன்’ எனக் குறிப்பிட அனைவரும் நெய்மரின் இந்த முதிர்ச்சியான செயலுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

More in Latest News

To Top