அடுத்த படம் என்ன ஆஸ்தான இயக்குனரிடம் விஷ்ணு விஷால் கேள்வி

அடுத்த படம் என்ன ஆஸ்தான இயக்குனரிடம் விஷ்ணு விஷால் கேள்வி

ஒரு சிலருக்கு ஒரு சில இயக்குனர்களின் காம்போ செட் ஆகிவிடும். அந்த காலத்தில் கமலுக்கு சந்தானபாரதி, ரஜினிக்கு எஸ்.பி முத்துராமன், என இன்று வரை அந்தந்த காலக்கட்டத்திற்கேற்ப ஹீரோ இயக்குனர் காம்போ தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் முண்டாசுப்பட்டி என்ற ஒரு படத்தை வித்தியாசமாக 80ஸ்ல் நடப்பது போல் படமாக்கி இருந்தார் ராம்குமார். கிராம மக்களின் எளிய பழக்க வழக்கங்கள் மூட பழக்க வழக்கங்களை அடிப்படையாக கொண்ட இந்த படம் விஷ்ணு விஷாலுக்கு நல்ல பெயர் பெற்று கொடுத்தது.அதே போல்  ராம்குமாரின் அடுத்த படமான ராட்சஷன் விஷ்ணு விஷாலின் மைல்கல்லான படம் ஆக பெயர் பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் ராம்குமாருக்கு இன்று பிறந்த நாள் ஆகும். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள விஷ்ணு விஷால் அடுத்த படம் என்ன முண்டாசுப்பட்டி 2 வா இல்ல ராட்சஷன் 2வா என வினவியுள்ளார்.