Entertainment
நியூயார்க்கில் இசைஞானி- வெங்கட் பிரபு பெருமிதம்
இசைஞானி இளையராஜாவின் இசைதான் நம் மனத்துயர் போக்கும் மருந்து என்றாகி விட்டது. தற்போதைய நவநாகரீக யுகத்தில் தினமும் எழுந்தால் பல்வேறு பிரச்சினைகளையும் போராட்டங்களையும் அலுவலகத்திலும் வீட்டிலும் சந்திக்க வேண்டியதாயுள்ளது.
எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்னவென்றால் இளையராஜாவின் பாடலை கேட்பதுதான். அன்னக்கிளி முதல் இன்று வரை வந்த பல படங்களின் பாடல்கள்தான் நம்மை சாந்தப்படுத்துகின்றன.
இளையராஜாவின் பெருமைகளை பலருக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவ்வளவு சாதனை படைத்த இசைஞானியின் உருவம் படைத்த மெகா சைஸ் டிஜிட்டல் சைனிங் போர்டு ஒன்று நியூயார்க் நகர வீதிகளில் உள்ள புகழ்பெற்ற டைம் சதுக்கத்தில் மிளிர்கிறது.
இது நமக்கு உள்ள பெருமை என இது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட் செய்துள்ளார்.
