சுற்றுச்சூழலை பாதுகாக்க காலி மது பாட்டில் கொடுத்து காசு கொடுக்கும் நீலகிரி மாவட்ட டாஸ்மாக்

சுற்றுச்சூழலை பாதுகாக்க காலி மது பாட்டில் கொடுத்து காசு கொடுக்கும் நீலகிரி மாவட்ட டாஸ்மாக்

தமிழ் நாட்டில் உள்ள முக்கிய மலைவாசஸ்தலங்களில் ஊட்டி மிக முக்கியமானதாகும். ஊட்டி, குன்னூர், கோத்தகிரியையை உள்ளடக்கிய நீலகிரி மாவட்டத்திற்கு அனுதினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இவர்களில் பலர் மது அருந்துவதோடு அதை தூக்கி வீசியும் செல்கின்றனர். இதனால் இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள் எல்லாம் பாழாகிறது.

இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி டாஸ்மாக்கில் வழக்கமாக விற்கப்படும் பாட்டில்களுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்கப்படும் என்ற ஸ்டிக்கரோடு விற்கப்படுகிறது.

மது குடித்துவிட்டு அந்த பாட்டிலை கொடுத்தால்  அந்த 10 ரூபாய் மீண்டும் டாஸ்மாக்கிலேயே வழங்கப்படுகிறது. இது ஒரு வித்தியாசமான நடை முறை திட்டமாக தெரிகிறது.