முன்பெல்லாம் படம் வெளிவந்த அன்று இத்திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகிறோம் என போஸ்டரை பார்க்கலாம். பிறகு 50வது நாள், 100வது நாள் போஸ்டர்களை பார்க்கலாம். இப்படத்தை காண வந்த கண்களுக்கு நன்றி என ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பர்.எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் காலம் வரை இந்நிலையே தொடர்ந்தது.
அஜீத், விஜய், தனுஷ், சிம்பு ரசிகர்கள், டிரெய்லர், டீசருக்கு எல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டிய காலமும் வந்தது.
இப்போது ஒரு படி மேலே போய் சிம்புவின் மாநாடு படத்திற்கான புதிய லுக்கை பார்க்க முடியவில்லை அதனால் புதிய லுக்கை ரிலீஸ் பண்ணுங்க என மதுரை சிம்பு ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
நியூ லுக்க்கு என போஸ்டரில் சற்று இடமும் விட்டுள்ளனர்.