Latest News
புதிய அரசு அமைக்க அழைப்பு விடுக்கும் ராஜபக்ஷே- ஏற்க மறுக்கும் தலைவர்கள்
இலங்கையில் பொருளாதார பிரச்சினையால் அந்த நாடு முழுவதும் உருக்குழைந்து விட்டது என்றே சொல்லலாம். எல்லா பொருட்களின் விலையும் தாறுமாறு உயர்வு, பல மணி நேர மின்வெட்டு எல்லாம் அந்த நாட்டில் ஏற்பட்டதால் அதிபர் கோத்தபய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சேக்கு எதிராக மக்களிடத்தில் புரட்சி வெடித்தது.
கோத்தா கோ ஹோம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. இலங்கை கொழும்புவில் உள்ள காலிமுகத்திடலில் கோத்தா கோ கம என்ற இடத்தை உருவாக்கி அதிபர், பிரதமரை பதவி விலக சொல்லி வலியுறுத்தி வந்தனர். இதில் இருவரும் பதவி விலக மறுத்த நிலையில் கடந்த 9ம் தேதி இவர்களுக்கு எதிராக கடும் கலவரம் ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி மஹிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். ஆனால் கோத்தபய ராஜபக்சே பதவியில் இருந்து விலக மறுத்து தொடர்ந்து ஏதாவது பேசி வருகிறார்.
இவரது பேச்சை மக்கள் கேட்பதாக இல்லை இருப்பினும் இந்த வாரம் புதிய அரசு அமைக்கப்படும் என முழங்கி வருகிறார். இவர் தலைமையிலான அதிபர் பதவிக்கு கீழ் யாரும் எந்த தலைவரும் பிரதமராக மறுத்து வருகின்றனர்.
தற்போது இலங்கையின் முக்கிய கட்சி தலைவரான சரத் பொன்சேகாவை ஆட்சி அமைக்க அதிபர் வலியுறுத்தினார் அவரும் உங்கள் தலைமையின் கீழ் ஆட்சி அமைக்க முடியாது என சொல்லி விட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.